ஸத்யவிரத க்ஷேத்திரமான திருக்கச்சியில் பஞ்ச தீர்த்தத்தின் கரையில் லஷ்மியைக் காண கள்ளத்தனமாக வந்ததால் பகவானுக்கு 'கள்வன்' என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மூலவர் கள்வர் என்ற திருநாமத்துடன் நின்றத் திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். காமாட்சி அம்மன் கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் வலப்புறத்தில் காட்சி தருகின்றார். தர்ம தரிசனம் செல்பவர்கள் பார்க்க முடியாது. பின்புறம் சிறப்பு தரிசனம் வழியாக உள்ளே செல்பவர்கள் மட்டும் தரிசனம் செய்ய முடியும். தாயாருக்கு அஞ்சிலைவல்லி நாச்சியார் என்பது திருநாமம். தாயார் சன்னதி தற்போது இல்லை. அச்வத்த நாராயணனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
முற்காலத்தில் பகவானின் திருநாமம் ஆதிவராகப் பெருமாள் என்று இருந்ததாகவும், பின்பு கள்வர் என்ற திருநாமம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|